இந்த மாத கோயில் விசேஷங்கள்

இந்த மாத கோயில் விசேஷங்கள்


திங்கள் தோறும் காலை 7.15 மணிக்கு சோமவார பூசை. சிவனுக்கு அபிஷேகம்,அலங்கார பூசைகள்

மாதம் தோறும் பௌர்ணமி ,கிருத்திகை,அம்மாவசை பூசைகள் சிறப்பாக நடக்கும். பௌர்ணமி அன்று தன்வந்திரிக்கு சிறப்பு பூசை நடக்கும்.





சிவஸ்ரீ சூலூர் சிவசண்முகம் சிவாச்சாரியார் அவர்களின் விநாயகர் மகிமை சொற்பொழிவு


சிவஸ்ரீ  சூலூர் சிவசண்முகம் சிவாச்சாரியார் அவர்களின்  விநாயகர் மகிமை 
சொற்பொழிவு.

 இவர் தற்பொழுது , ஆஸ்திரலிவில் உள்ள ஹெலன்ஸ்பர்க் சிட்னி திருகோவில் ஒன்றில் ஆன்மீக  பணியாற்றி வருகிறார் .




கோவில் அமைவிடம் (செயற்கைக்கோள்)






இக்கோயில் இயற்கை எழில் கொஞ்சும்  இரு குளங்கள் சூழ்ந்த கரையில் தெய்வீகமாக அமைந்துள்ளது.




View Larger Map






திருக்கோவில் வரலாறு

திருக்கோவில் வரலாறு




சூலூர் அருள்மிகு ஸ்ரீ தையல் நாயகி உடனமர் ஸ்ரீ வைத்தீஸ்வரர் சுயம்பு திருமேனி கொண்டு அருள் பாலிக்கும் தீராத நோய் தீர்த்தருள வல்லவர்
ஆவார். சூரலூர் அரிய பிராட்டி நல்லூர் என்று 9-ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட இன்றைய சூலூரின் கண் சோழ அரசன் கரிகாலன் (கல்லனை கட்டியவன் அல்ல) காட்டினை திருத்தி,சமன் செய்து ஊராக்கும் போது சுயம்பு மூர்த்தியாக கண்டு  "வைத்தியலிங்கமுடையார்" என்ற திருநாமம் சாற்றி,கற்றளி கோவிலாககட்டி கும்பாபிஷகமும் செய்வித்து பல்வேறு நிவேதனங்களை கோவிலுக்கு அளித்த்தாகவும், கொங்கு நாட்டில் அவன்  கட்டிய 36 பெரிய சிவாலயங்களில் ஓன்று எனவும்,தமிழ்நாடு அரசின் 1950ம் ஆண்டு வெளியீடான சோழன் பூர்வ பட்டையம் எனும் நூல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து (1168-1196) அரசாண்ட மூன்றாம் வீரசோழன் என்பான். இத் திருக்கோவிலில் சிவ பூசை முறையாக நடைபெற வரிக்கொடை அளித்த செய்தியினை இன்றைய செலக்கரச்சல் மாரியம்மன் கோவில் முன்புள்ள தனிக் கல்வெட்டு மூலமாக அறியலாம்.

தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடான கோயம்புத்தூர் மாவட்டம் கல்வெட்டுக்கள் தொகுதி-2 என்ற நூல் இதனை உறுதி செய்கின்றது.

   எனவே, இத்திருக்கோவிலின் மூலவர் ஸ்ரீ வைத்தீஸ்வர பெருமான் மிகவும்,பழமை வாய்ந்த மூர்த்தியாவார். கற்றளிக் கோவிலாக இருந்த்து.காலப்போக்கில்,மற்ற கோவில்களை போல உரிய 
இறைவியினையும் ஸ்தாபித்து பரிவார மூர்த்திகளையும் ஸ்தாபித்து இன்றைய கோவிலாக உருவெடுத்துள்ளது.  

இத்திருகோவிலை நாகை மாவட்டத்தின் ஸ்ரீ வைத்தீஸ்வரர் திருகோவிலுக்கு  (செவ்வாய் கிரகஸ்தலம்) இணையாக கருதலாம்.






உழவாரப்பணிக்குழு

உழவாரப்பணிக்குழு

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு  அன்று  கோயில் பரமரிப்பு மற்றும்
தூய்மை படுத்தும் பணி நடக்கும் .

இது இக்கோயிலில் சிறப்பாக நடக்கிறது.  ஆர்வமும்,பக்தியும் உள்ள  யர்ர்வெண்டுமானலும் கலந்து கொள்ளலாம் .

சிவாச்சாரியார்கள்

  சிவாஜல சுந்தர குருக்கள் (பாபு) - 9865010696













 சிவாஜல சுப்பிரமணிய குருக்கள் (சுப்பு) - 9842645411















திருமண வைபோகம்


அருள்மிகு ஸ்ரீ தையல் நாயகி உடனமர் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி
 திருமண வைபோகம் வீடியோ

சிவாச்சாரியர்கள்  , மற்றும் பெருமாள் கோயில் ஐயர் , கோயில் பக்தர்கள்